தமிழ், தெலுங்கு சினிமாக்களில் முன்னணி இடம் பிடித்துள்ள நடிகை சமந்தா விரைவில் மணமகளாக உள்ளார். நடிகர் நாக சைதன்யாவை காதலித்து வந்த அவர், கணவனாக ஏற்கவுள்ளார்.

திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது சமந்தா பாரம்பரிய முறையை கடைபிடிக்கவுள்ளாராம். திருமணத்தன்று பழைய பட்டு புடவை ஒன்றை உடுத்த திட்டமிட்டுள்ளாராம்.

இது வேறொன்றுமல்ல. நாக சைதன்யாவின் பாட்டியின் பட்டு சேலையாம். பாரம்பரியமான இந்த உடையில் தான் மங்கல நாண் சூட்டும் வைபவம் நடைபெறவுள்ளது.

Loading...