‘லிப் டு லிப்’ தரவும் ரெடி! – ப்ரியா ஆனந்த்!

ப்ரியா ஆனந்த் நடிப்பில் கடந்த வாரங்களில் இரு படங்கள் அடுத்தடுத்து வெளியாகின. ஒன்று அரிமா நம்பி. அடுத்து இரும்புக் குதிரை. இரண்டாவது படத்தின் நிலைமை என்னவென்பது பலருக்கும் தெரிந்ததுதான். ஆனால் அரிமா நம்பி நல்ல வெற்றியைப் பெற்றது. இது போதாதா…

இனி பெரிய நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துவிட வேண்டும் என முனைப்பு காட்ட ஆரம்பித்துள்ளார்.

அடுத்து ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ , ‘வை ராஜா வை’ என ப்ரியா ஆனந்த்துக்கு நம்பிக்கை தரும் படங்கள் வெளியாகவிருக்கின்றன. இந்நிலையில் ப்ரியா ஆனந்த் சமீபத்தில், அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு ‘அரிமா நம்பி’ இயக்குநர் ஆனந்த் ஷங்கரை அணுகியுள்ளார்.

ஆனந்த் ஷங்கர் அடுத்து விக்ரமை இயக்கப் போகிறாராம். இந்தக் கதைக்கு அதிக கிளாமராக நடிக்கக் கூடிய ஹீரோயின் தேவை என்பதைக் கேள்விப்பட்டு, தானே அவரை அணுகி வாய்ப்புக் கேட்டுள்ளார் ப்ரியா. தேவைப்பட்டால் வாயோடு வாய் வைத்து முத்தக் காட்சிகளிலும் நடிக்கத் தயார் என ஆஃபரை கொஞ்சம் தாராளமாகவே கொடுத்துவிட்டு பதிலுக்குக் காத்திருக்கிறாராம்! வாயுள்ள பிள்ளை பிழைச்சுக்கும்!

Loading...