‘அம்மா’ தான் என் ரோல் மாடல்… இப்படிச் சொல்வது ஸ்ருதிஹாசன்!

நட்சத்திர தம்பதியான கமல் -சரிகாவின் மூத்த மகளான நடிகை ஸ்ருதிஹாசன், ‘தன் அம்மா தான் தனது ரோல் மாடல்’ எனத் தெரிவித்துள்ளார்.

ஏழாம் அறிவு மற்றும் 3 படங்களைத் தொடர்ந்து தமிழில் சிறிய இடைவெளி எடுத்துக் கொண்ட நடிகை ஸ்ருதிஹாசன், ஹரி இயக்கத்தில் விஷாலின் ஜோடியாக நடித்த பூஜை திரைப்படம் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளது. இந்தியில் நஸ்ருதீன் ஷா, நானா படேகர் மற்றும் டிம்பிள் கபாடியா என மூன்று சூப்பர் ஸ்டார்களுடன் வெல்கம் பேக் படத்தில் நடித்து வருகிறார் ஸ்ருதி.

ஒரே நேரத்தில் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு என நடித்து வரும் ஸ்ருதி ஆனந்த விகடனுக்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் அவர் தனது ரோல் மாடல், தனது அம்மா சரிகா தான் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், இது தொடர்பாக அப்பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:-

அம்மா சரிகா ரொம்பவே சுதந்திரமானவங்க. தைரியசாலி. எந்தப் பிரச்சினையையும் சமாளிப்பாங்க. என் ரோல் மாடல் அவங்க தான்.

என் மும்பை வீட்டில் யாரோ அடையாளம் தெரியாத ஆள் நுழைஞ்சிட்டான்னு நியூஸ் வந்தப்ப, எல்லாரும் பயந்தாங்க.

ஆனா, ‘நீ என் பொண்ணு. எதுக்கும் பயப்பட மாட்டேனு எனக்குத் தெரியும்’னு கம்பீரமா சொன்னாங்க. அது என் தன்னம்பிக்கையை இன்னும் ஜாஸ்தி ஆக்குச்சு.

அதே சமயம் எனக்கு சின்ன ஜூரம் வந்தாக்கூடப் பதறிடுவாங்க. என் கையைப் பிடிச்சிட்டுப் பக்கத்துலயே இருப்பாங்க. இப்போ வரை அப்படித்தான்.

அப்பா, அம்மா, அக்‌ஷரா… இந்த மூணு பேரும் தான் என் சொத்து. இவங்க இல்லைன்னா… இந்த ஸ்ருதி இல்லை’ என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Loading...