ஆபாச நடிகை படத்தில் தனுஷ் நடிக்கிறாரா?

ஹாலிவுட்டின் பிரபல நாயகி கிம் கர்தஷியான். பைசல் சயீப் இயக்கவுள்ள For Adults Only படத்தில் கிம் கர்தஷியான் நடிக்க அவரிடம் கேட்டுள்ளனர்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராக இருக்கும் இப்படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக செய்திகள் வந்துள்ளது. இந்நிலையில், இதுபற்றி இயக்குனர் கூறுகையில், தனுஷ் சிறந்த நடிகர். இதில் இருவேறு கருத்து கிடையாது.

ஆனால் For Adults Only படத்தில் நடிக்க கேட்டு அவரை அணுகவில்லை. கிம் கர்தஷியானை நடிக்க கேட்டு பேசப்பட்டது. அநேகமாக அவர் கெஸ்ட் ரோலில் நடிக்க சம்மதிப்பார் என்று எண்ணுகிறோம்.

தமிழில் இப்படம் உருவாவதால் தமிழ் ஹீரோ ஒருவர் நடிக்கலாம். அவர் யார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. துபாயை சேர்ந்த ஆன்ட்ரியா டி சோஸா ஹீரோயினாக நடிக்க உள்ளார் என்றார்.

Loading...