இந்த நேரத்திலும் கூட பிகினியா, இவளால் எப்படி முடிகிறது?: பிரியங்காவை பார்த்து வியக்கும் நடிகைகள்!

பிரியங்கா சோப்ரா
பிரியங்கா சோப்ரா

தனது ஹாலிவுட் படமான பேவாட்ச் ஊத்திக் கொண்டபோதிலும் பிகினியில் வெந்நீரில் குளிக்கும் படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை பிரியங்கா சோப்ரா.

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் தொலைக்காட்சி தொடரான குவான்டிகோவில் ஹீரோயினாக நடித்து வருகிறார். ஹாலிவுட் டிவி தொடரில் ஹீரோயினாக நடித்து வரும் முதல் இந்திய நடிகை பிரியங்கா.

குவான்டிகோவில் அவர் நடிப்பதை பார்த்தே பாலிவுட்டில் பல நடிகைகள் காண்டாகினர்.

பிரியங்கா சோப்ரா
பிரியங்கா சோப்ரா

குவான்டிகோவில் நடித்த பிரியங்காவுக்கு பேவாட்ச் ஹாலிவுட் படத்தில் வில்லியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. படத்தை பரபரப்பாக விளம்பரம் செய்தார் பிரியங்கா.

பேவாட்ச் படம் அமெரிக்காவில் ரிலீஸாகியுள்ளது. படத்தை பார்த்த சர்வதேச ஊடகங்கள் கழுவிக் கழுவி ஊத்தியுள்ளன. படம் பிளாப் என்று கூறுகிறார்கள்.

தனது முதல் ஹாலிவுட் படம் ஊத்திக் கொண்டுள்ள இந்த நேரத்தில் பிரியங்கா பிகினி அணிந்து வெந்நீரில் குளியல் போடும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

முதல் ஹாலிவுட் படமே ஊத்திக்கிச்சு என்று கொஞ்சம் கூட வருத்தம் இல்லாமல் இப்படி பிகினி புகைப்படத்தை ரிலீஸ் பண்ண பிரியங்காவால் எப்படி முடிகிறது என்று பாலிவுட் நடிகைகள் வியக்கிறார்கள்.

Loading...