மகளை விட 5 வயது மூத்த பெண்ணை மூன்றாவது முறையாக காதலிக்கும் பிரபல இயக்குனர்

சுப்ரதா ஷெட்டி - அனுராக்
சுப்ரதா ஷெட்டி - அனுராக்

சினிமா கலைஞர்களின் வாழ்க்கையில் காதல் சர்ச்சை எப்போதுமே சுற்றிக்கொண்டே இருக்கும்.

இவர்களில் பலருக்கு வயது பெரிய தடையாக இருப்பதே இல்லை. சமீபத்தில் 60 வயது இயக்குனர் வேலு பிரபாகரன் 30 வயது நடிகையை திருமணம் செய்தார்.

அதே போல் பாலிவுட்டில் பல வெற்றிப்படங்களை தந்தவர் இயக்குனர் அனுராக் காஷ்யப். இவர் நயன்தாராவின் இமைக்கா நொடிகள் படத்திலும் முக்கியமான வேடத்தில் நடித்து வருகிறார்.

சுப்ரதா ஷெட்டி - அனுராக்
சுப்ரதா ஷெட்டி – அனுராக்

44 வயதான அனுராக் 23 வயது சுப்ரதா ஷெட்டி என்ற பெண்ணை காதலித்து வருகிறார். இவருடன் திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்திவருகிறாராம்.

இவர் கடந்த 2015ல் தான் இரண்டாவது மனைவி நடிகை கல்கி கோச்சிலினை விவாகரத்து செய்தார். மேலும் இவரது மகளுக்கு வயது 17 என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...