பாலிவுட் நடிகை ரியா சென் கருப்பு நிற பிகினியில் புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

பிரபல நடிகை மூன் மூன் சென்னின் மகள் ரியா சென். பாலிவுட்டில் அறிமுகமான அவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, பெங்காலி படங்களிலும் நடிக்கத் துவங்கினார்.

பாரதிராஜாவின் தாஜ்மஹால் படம் மூலம் கோலிவுட் வந்தவர் பிரசாந்துடன் சேர்ந்து குட்லக் படத்தில் நடித்தார்.

ரியா சென்
ரியா சென்

இந்தி படங்களில் கவனம் செலுத்தி வந்த அவரின் மார்க்கெட் மெல்ல மெல்ல படுத்துவிட்டது. இதையடுத்து தாய் மொழியான பெங்காலி மொழி படங்களில் நடித்து வருகிறார்.

பெங்காலி படங்கள் தவிர்த்து குறும்படங்களிலும் நடித்து வருகிறார் ரியா. மேலும் யாராவது இயக்குனர் தனது படத்தில் குத்தாட்டம் போட அழைத்தாலும் செல்கிறார்.

ரியா சென்
ரியா சென்

மார்க்கெட் சரியில்லாத இந்த நேரத்தில் ரியா சென் கருப்பு நிற பிகினி அணிந்து புகைப்படம் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் எதிர்பார்த்தபடியே பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ரியா சென்
ரியா சென்

ரியா தற்போது ராகினி எம். எம்.எஸ்.2.2 வெப் சீரிஸில் சிம்ரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பாலிவுட் நடிககைள் வெப் சீரிஸில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...