சொன்ன மாதிரியே திடீர்னு கையில் குழந்தையுடன் வந்து நின்ற ‘அம்மா’ சன்னி லியோன்

சன்னி லியோன்
சன்னி லியோன்

வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள லாத்தூரை சேர்ந்த பெண் குழந்தையை தத்தெடுத்துள்ளார் நடிகை சன்னி லியோன்.

பாலிவுட் நடிகை சன்னி லியோன் படங்கள், விளம்பர படங்கள் என்று பிசியாக உள்ளார். திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிய நிலையில் சன்னிக்கு தாயாகும் ஆசை வந்தது.

இது குறித்து அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பேட்டி அளித்தார்.

நான் ரொம்ப பிசி. அதனால் தற்போதைக்கு கர்ப்பமாகி குழந்தை பெரும் நிலையில் நான் இல்லை. திடீர் என்று ஒரு நாள் கையில் குழந்தையுடன் வந்து நின்று ரசிகர்களை ஆச்சரியப்படுத்துவேன் என்றார் சன்னி.

சன்னி சொன்னபடியே ஆச்சரியப்பட வைத்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் லாத்தூரை சேர்ந்த பெண் குழந்தையை தத்தெடுத்துள்ளார் சன்னி. குழந்தைக்கு நிஷா கவுர் வெபர் என்று பெயர் வைத்துள்ளனர்.

கணவர் டேனியல் வெபருடன் சேர்ந்து சன்னி குழந்தையை தத்தெடுத்த விஷயத்தை பாராட்டி நடிகை ஷெர்லின் சோப்ரா ட்வீட்டியுள்ளார். அதை பார்த்த சன்னி நன்றி தெரிவித்துள்ளார்.

சன்னி ஒரு ஆசிரமத்தில் இருந்து குழந்தையை தத்தெடுத்துள்ளார். அந்த குழந்தைக்கு ஏற்ப தனது வேலை நேரத்தை மாற்றிக் கொள்ளப் போவதாக சன்னி தெரிவித்துள்ளார்.

Loading...