ஹெட்லைட்டும் இல்லை, பம்பரும் இல்லை: நடிகையின் உடல்வாகை விமர்சித்த சக நடிகை!

பைரவி கோஸ்வாமி
பைரவி கோஸ்வாமி

பாலிவுட் நடிகை க்ரிட்டி சனோனை சக நடிகையான பைரவி கோஸ்வாமி கேவலமாக கிண்டல் செய்துள்ளார்.

நான் பாலிவுட்டின் நம்பர் ஒன் விமர்சகராக்கும் என்று சொல்லிக் கொண்டு திரியும் கேஆர்கேவுக்கு யாரையாவது கிண்டல் செய்வது, வம்பு இழுப்பதே வேலையாகிவிட்டது.

இந்நிலையில் அவர் பாலிவுட் நடிகை க்ரிட்டி சனோனை கிண்டல் செய்தார்.

ரப்தா படம் ஊத்திக் கொண்டதால் பாவம் க்ரிட்டிக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார் கேஆர்கே. க்ரிட்டி டான்ஸ் ஆடும் ஒரு வீடியோவை வெளியிட்டு தான் இப்படி ஒரு கமெண்ட் அடித்துள்ளார்.

கேஆர்கேவின் ட்வீட்டை பார்த்த நடிகையும், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியுமான பைரவி கோஸ்வாமி ட்வீட்டியிருப்பதாவது, அவர் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் போன்று தான் நடந்து கொள்கிறார். அவர் எப்படி நடிகை ஆனார். ஹெட்லைட் இல்லை, பம்பர் இல்லை. கல்லூரி மாணவிகள் கூட பார்க்க நன்றாக இருப்பார்கள் என்றார்.

சக நடிகையை அசிங்கமாக கிண்டல் செய்த பைரவியை பலர் விமர்சித்துள்ளனர். நீங்கள் நல்ல நடிகை இல்லை என்று தெரியும் ஆனால் நீங்கள் நல்ல மனுஷியே இல்லை என்று நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.

எவ்வளவு பொறாமை பிஜி!! சும்மா குரைப்பதற்கு பதில் வேலை செய்யுங்கள் என்று ஒருவர் கடுப்பாகி கமெண்ட் போட்டுள்ளார்.

Loading...