பீச்… பிகினி… நம்ம டாப்ஸி!

டாப்ஸி
டாப்ஸி

மொரீஷியஸ் கடற்கரையில் டாப்ஸி பிகினியில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பாலிவுட்டில் போராடிக் கொண்டிருந்த டாப்ஸிக்கு தற்போது தான் நல்ல வாய்ப்புகள் கிடைக்கிறது. அவருக்கு நடிக்க வரும் என்று பாலிவுட்காரர்கள் புரிந்து கொண்டுள்ளனர்.

தற்போது டாப்ஸி வருண் தவானுடன் சேர்ந்து ஜுட்வா 2 படத்தில் நடித்துள்ளார்.

டாப்ஸி
டாப்ஸி

ஜுட்வா 2 படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு மொரீஷியஸில் நடந்தது. அப்பொழுது பிகினியில் எடுத்த புகைப்படத்தை டாப்ஸி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

வருண் தவான் இரட்டை வேடங்களில் நடித்துள்ள ஜுட்வா 2 படத்தில் ஜாக்குலின் பெர்ணான்டஸும் உள்ளார். படப்பிடிப்பு முடிந்துள்ளதை வருண் தவானும் சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார்.

ஜுட்வா 2 வரும் செப்டம்பர் மாதம் 29ம் தேதி ரிலீஸாகிறது. சல்மான் கான் இரட்டை வேடங்களில் நடித்து 1997ம் ஆண்டு வெளியான ஜுட்வா படத்தின் இரண்டாம் பாகம் தான் ஜுட்வா 2 என்பது குறிப்பிடத்தக்கது.

டாப்ஸி மும்பையில் வீடு வாங்கியுள்ளார். பாலிவுட், டோலிவுட் படங்களில் பிசியாக இருப்பதால் புதுமனை புகுவிழா நடத்த முடியாமல் உள்ளார் என்று கூறப்படுகிறது.

Loading...