பொது நிகழ்ச்சிகளுக்கு உணர்ச்சிகளை தூண்டும் வகையில் ஆடை அணிந்து வருவேன் ஆனால் நீங்கள் அதை வேறு விதமாக பார்க்கக் கூடாது என்பதில் என்ன நியாயம் என்று தீபிகாவிடம் அந்த பிரபல நாளிதழ் கேட்டுள்ளது. நடிகை தீபிகா படுகோனே தனது கிளீவேஜில் பெரும்பகுதியை காட்டியது குறித்து செய்தி வெளியிட்ட பிரபல ஆங்கில நாளிதழ் மீது கோபம் அடைந்துள்ளார். ஒரு முன்னணி நாளிதழாக இருந்து கொண்டு இது தான் உங்களுக்கு செய்தியா என்று கேட்டார். அதற்கு அந்த நாளிதழ் இந்த செய்தியை நீங்கள் பாராட்டாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றது. ஆனால் தீபிகா விடுவதாக இல்லை.

இந்நிலையில் அந்த நாளிதழ் தனது இணையதளத்தில் கூறியிருப்பதாவது,

தீபிகா தனது அழகை காட்டினால் அதை சிலர் பார்ப்பார்கள், சிலர் வழிவார்கள்., சிலர் புருவத்தை உயர்த்துவார்கள். நண்பர்களும், பெண்ணியவாதிகளும் மீடியாவை எதிர்த்து போராட்டம் நடத்துவார்கள்.

நடிகர்களின் உடம்பை பார்த்து கொள்ளு விடலாம் ஆனால் நடிகைகளை பார்த்து விடுவதை மட்டும் ஏற்க மாட்டார்கள்.

ஷாருக்கான், ரித்திக் ரோஷனின் சிக்ஸ் பேக் உடம்பை கேமராக்கள் படம் பிடித்தால் யாரும் எதிர்ப்பது இல்லை. மாறாக பாராட்டி, ஜொள்ளு விடுகிறோம். ஆனால் பெண் விஷயத்தில் மட்டும் ஏன் வேறு விதமாக உள்ளது?

ஒரு பிரபலமாக இருப்பவர் பொது நிகழ்ச்சிக்கு வந்தால் நெயில் பாலிஷில் இருந்து திரும்பத் திரும்ப அணிந்து வரும் காலணி வரைக்கும் அனைத்தையும் பார்க்கத் தான் செய்வார்கள்.

பெண்ணின் அழகை ரசிப்பது, அதில் கவனம் செலுத்துவது குற்றம் என்றால் குத்தாட்ட பாடல்கள் அனைத்துக்கும் தடை விதிக்க வேண்டும்.

நான் உணர்ச்சியை தூண்டும் வகையில் உடை அணிந்து பொது இடங்களுக்கு வருவேன். ஆனால் நீங்கள் என்னை வேறு விதமாக பார்க்கக் கூடாது என்பதில் என்ன நியாயம் உள்ளது?

வீட்டில் மட்டும் குடும்பத்தார், மாமனார், மாமியார், கணவர், அக்கம் பக்கத்தினர் என்ன சொல்வார்கள் என்பதை மனதில் வைத்து ஆடை அணிவீர்கள்.

கேமராக்கள் முன்பு வரும் ஒரு பிரபலம் தன்னிடம் எதை பிறர் கவனிக்க வேண்டும் என்று விரும்புகிறார்களோ அதை மட்டும் காண்பிக்க வேண்டும். பெண் உரிமை என்ற பெயரில் இவ்வாறு கூறுவது சில்லறைத்தனமாக உள்ளது.

அவரவருக்கு ஒவ்வொரு கருத்து உள்ளது. ஒருவரின் கருத்தை தெரிவிக்க அனைவருக்கும் உரிமை உண்டு. அது டாப் ஆங்கிளாக இருந்தாலும் சரி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது அனுமதி இன்று டாப் ஆங்கிளில் தனது முன்னழகை புகைப்படம் எடுத்து வெளியிட்டுவிட்டார்கள் என்று தீபிகா குற்றம் சாட்டியிருந்தார்.

Loading...