தீபிகா படுகோனேவின் கிளீவேஜ் பற்றி செய்தி வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய டைம்ஸ் ஆம் இந்தியா நாளிதழ் தற்போது ஐஸ்வர்யா ராயை வம்புக்கு இழுத்துள்ளது.

நடிகை தீபிகா படுகோனேவின் கிளீவேஜ் பற்றி புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டது டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ். அந்த நாளிதழை தீபிகா விளாச பதிலுக்கு அவரை நாளிதழ் விளாச என்று அது ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் அந்த நாளிதழ் அடுத்ததாக வம்புக்கு இழுத்திருப்பது நடிகை ஐஸ்வர்யா ராயை.

Aishwarya Rai_1

அசிங்கமான கால்களை உடைய அழகிகள் என்ற தலைப்பில் டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் அவரது கால்களை மறைத்திருக்கும் போது தான் அழகாக உள்ளது என்று டைம்ஸ் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.

நாளிதழ் செய்தி வெளியிட்டதை பார்த்து பலர் கொந்தளித்துள்ள போதிலும் இது குறித்து ஐஸ் இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

aishwaryarai-cannes-2010

ஜஸ்வர்யா ராயை மட்டும் அல்ல நடிகை பூமிகா, ஹாலிவுட் நடிகைகள் கேட்டி ஹோம்ஸ், லின்ட்சே லோஹன், பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் ஆகியோரின் கால்களும் அசிங்கமாக உள்ளதாக டைம்ஸ் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.

ஆஸ்கர் விருது வாங்கிய ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலியின் கைகளும், கால்களும் குச்சி, குச்சியாக அசிங்கமாக இருப்பதாக டைம்ஸ் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.

Loading...