நசிருதீன் ஷாவுடன் நடித்தது சவுகரியமாகவே இருந்தது-வித்யா பாலன்

Written by admin. Posted in பாலிவுட்

30-the-dirty-picture-1300

Published on November 30, 2011 with No Comments

சில்க் ஸ்மிதாவின் கதையாக கூறப்படும் தி டர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் நடித்துள்ள வித்யா பாலன், அதிக வயதான நசிருதீன் ஷாவுடன் இணைந்து நடித்தது எந்த சங்கடத்தையும் தனக்கு ஏற்படுத்தவில்லை என்றும், மிகவும் சவுகரியமாகவே தான் உணர்ந்ததாக கூறியுள்ளார்.

இருவரும் இணைந்து நடிப்பது இது முதல் முறையல்ல. ஏற்கனவே இருவரும் இணைந்து நடித்துள்ளனர். டர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் கவர்ச்சி ரசம் சொட்டச் சொட்ட நடித்துள்ளார் வித்யா என்கிறார்கள். எனவே நசிருதீன் ஷாவுடன் இணைந்து நடித்தபோது வித்தியாசமாக இருந்ததா என்று செய்தியாளர்கள் கேட்டதற்குத்தான் மேற்கண்டவாறு பதிலளித்தார் வித்யா.

இதுகுறித்து அவர் கூறுகையில், இருவருக்கும் இடையிலான வயது வித்தியாசம் ஷூட்டிங்கின்போது தெரியவில்லை. அதுகுறித்து நான் கவலைப்படவும் இல்லை. மேலும் இது ஒன்றும் ஆபாசப் படம் அல்ல. அருமையான கதையுடன் கூடிய படம்தான்.

நசிருதீன் ஷா போன்ற பெரிய நடிகருடன் இணைந்து நடிக்கும்போது நமக்கு நடிப்பு எளிதாகி விடுகிறது. அவர் மிகச் சிறந்த நடிகர். முன்பும் கூட அவருடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். எனவே எனக்கு எந்த அசவுகரியமும் ஏற்படவில்லை. அவருடன் நடிப்பது மிகவும் சவுகரியமான ஒன்றாகவே இருக்கிறது என்றார் வித்யா.

ஏற்கனவே இருவரும் இணைந்து இஷ்கியா படத்தில் நடித்துள்ளனர் என்பது நினைவிருக்கலாம்.

டர்ட்டி பிக்சர்ஸ் படம் டிசம்பர் 2ம் தேதி திரைக்கு வருகிறது. அன்றுதான் சில்க் ஸ்மிதான் பிறந்த தினம் என்பது குறிப்பிடத்தக்கது.