பாடுவதை மட்டும் நிறுத்தவே மாட்டேன்! – ஸ்ருதி ஹாசன்

Written by admin. Posted in நடிகை

Shruti20Hassan

Published on September 29, 2011 with No Comments

‘லக்’ என்ற இந்தி படம் மூலம் நடிகையாக அறிமுகமான கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன், தெலுங்கிலும் தலைகாட்டிவிட்டு, தமிழில் இப்போது தான் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருக்கும் ’7ஆம் அறிவு’ படத்தின் ஹீரோயினாக அறிமுகமாகிறார். பேட்டியின் போது சென்னையிலேயே பிறந்து வளர்ந்த பொண்ணு நான், முதன்முறையாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக களமிறங்குகிறேன். நிறைய எதிர்பார்ப்போடு என் நடிப்பை, தமிழ் ரசிகர்கள் திரையில் பார்க்க போறாங்கனு நினைக்கும் போது, கொஞ்சம் பதட்டமாகவும், அதேசமயம் ரொம்ப ஆவலாகவும் இருக்கிறது.

எனக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணி, உதவி செய்த டைரக்டர் முருகதாஸ் சாருக்கு இந்தநேரத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். 6ம் நூற்றாண்டுக் கதையில் நானும் இருக்கேன் என நினைக்கும் போது ரொம்ப பெருமையாக இருக்கிறது. இந்த முதல்பட வாய்ப்பை நான் என்றுமே என் வாழ்வில் மறக்க மாட்டேன் என்றார். மேலும் பாடகியாக சினிமாவுலகில் நுழைந்த ஸ்ருதிஹாசன் எத்தனை படங்களில் நடித்தாலும் பாடல் பாடுவதை நிறுத்தக்கூடாது என முடிவு செய்திருக்கிறார்.