‘உச்சிதனை முகர்ந்தால்’ திரைப்படம் நச்சு இனவெறிச் சிங்கள ஆட்சியாளரை வெளிச்சத்தில் நிறுத்தி தோல் உரிக்கிறது.
ஈழத் தமிழர்களின் அவலவாழ்வைச் சித்திரிக்கும் படமான ‘கூட்டாளி” தமிழ்த் திரைப்படம் வெகுவிரைவில் திரைக்கு வெளிவரவுள்ளது.
ஈழக்கவிஞர் காசி ஆனந்தனின் கவிதைகள் அத்தனையும் அவ்வளவு ஆக்ரோஷம் கொண்டவை. இவற்றில் மிக முக்கியமான கவிதை ஒன்றுதான் ‘இருப்பாய் தமிழா நெருப்பாய்’ என்ற வரிகள் கொண்ட பாடல்.
தேன் கூடு திரைப்படத்தின் முன்னோட்டம்…..
கவிதை பேசும் விழிகள் முழுக்க கனவுகளோடு பறந்து திரிந்த மட்டக்களப்பு இளம் புறா புனிதவதிக்கும், உணவு மறந்து – உறவு மறந்து தாயகக் கனவுடன் தலைநிமிர்ந்து நடந்த பெண் போராளிகளுக்கும் இடையிலான நட்பும் பாசமும் அழுத்தமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கும் ”உச்சிதனை முகர்ந்தால்” திரைப்படம் தீபாவளி தினத்தன்று திரைக்கு வரவுள்ளது.
இருப்பாய் தமிழா நெருப்பாய் – பாடல் மூலம் உலகத் தமிழர்களை சிலிர்த்தெழச் செய்துள்ள இசையமைப்பாளர் டி.இமான், உச்சி தனை முகர்ந்தால் திரைப்படத்தின் பின்னணி இசைக் கோர்ப்புப் பணியில் தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
ஈழத்தில் தமிழருக்கு எதிராக நடந்த இனப்படுகொலைக்கு ஆயுதங்களை சப்ளை செய்ததை மையப்படுத்தி வெளிவந்திருக்கும் படம், ஜெய் ஆகாஷ் நடித்துள்ள ஆயுதப் போராட்டம்.
புலம்பெயர் ஈழத்தமிழர்களின் உருவாக்கத்தில் ஈழத்தமிழர்களின் அவலங்களைச் சொல்லும் “உச்சிதனை முகர்ந்தால்” திரைப்படத்தின் இசை இறுவெட்டு வெளியீட்டு விழா ஆகஸ்ட் 19ஆம் திகதி சென்னையில் இலங்கை இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.
ஜீலை 31, 2011 ஆம் திகதியன்று , லண்டன் மாநகரில் ‘உச்சிதனை முகர்ந்தால்’ திரைப்படத்தின் இசை வெளியீடு மிகச்சிறப்பாகநடந்து முடிந்துள்ளது.