நண்பன் என்னும் நல்ல படத்தில் நானும் நடித்துள்ளேன் என்று ‘இளைய தளபதி’ விஜய் அமைதியாகத் தெரிவித்துள்ளார்.
கமல ஹாசனுக்காக விஜய் தனது நண்பன் படத்தின் ஸ்பெஷல் ஷோவுக்கு ஏற்பாடு செய்திருந்தார். படத்தைப் பார்த்த கமல் விஜய்யை மனதாரப் பாராட்டியுள்ளார்.
சல்மான் ருஷ்டி இந்தியா வருவதைத் தடை செய்யக் கூடாது என்று நடிகை ஷ்ரியா கருத்து தெரிவித்துள்ளார்.
விஜய் நடிப்பில், பொங்கலுக்கு வெளியாகி ஓடிக் கொண்டுள்ள நண்பன் படம் வசூல் சாதனை படைத்து வருவதாக செய்திகள் கூறுகின்றன. படம் வெளியாகி 10 நாட்கள் ஆகி விட்ட நிலையில் இதுவரை ரூ. 110 கோடியை அது வசூலித்துள்ளதாகவும் கூறுகிறார்கள்.
காட்சிக்குத் தேவைப்பட்டதால்தான் இலியானாவுக்கு நண்பன் படத்தில் முத்தமிட்டேன். அதேசமயம், அவருக்கு நான் நேருக்கு நேராக முத்தமிடவில்லை. இதனால் மூக்கு இடிக்கவில்லை என்று முத்தமிட்டது தொடர்பாக வித்தியாசமான விளக்கம் அளித்துள்ளார் விஜய்.
பொங்கல் பண்டிகையின் குதூகல மூடுக்கேற்ப வந்துள்ள படம் என்றால் லிங்குசாமியின் வேட்டைதான். இத்தனைக்கும் படத்தின் கதை ஒன்றும் புதிதில்லை. எம்ஜிஆர் கால பார்முலாதான்.
அது என்னமோ தெரியவில்லை… எந்த நடிகையைக் கேட்டாலும் ஒரு படத்திலாவது விலை மாதுவா நடிக்கணும்னு ரொம்ப ஆசயாயிருக்கு என்பதை ஒரு ஸ்லோலன் மாதிரி தவறாமல் சொல்லிவிடுகிறார்கள்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உள்ள கோச்சடையான் திரைப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் 15ம் தேதி முதல் தொடங்கும் என்று படத்தின் மேற்பார்வையாளர் கே.எஸ்.ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
பில்லா– 2 படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது, அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மயக்கம் என்ன படத்தில் தனுஷ் பாடியுள்ள ‘காதல் என் காதல் கண்ணீரிலே பாடல்’ சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இந்தப் பாடல் பெண்களுக்கு எதிராக வன்முறையை தூண்டும் விதமாக உள்ளதாகவும் அதனை தடை செய்ய வேண்டும் என்றும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.