பிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்

லக்ஷ்மி சிவனேஸ்வரலிங்கம்
லக்ஷ்மி சிவனேஸ்வரலிங்கம்

உலகெங்கும் வாழும் இலங்கை தமிழ் மக்கள் தமது சொந்த நாட்டை விட்டு வெளியேறி பல்வேறு நாடுகளில் வசித்து வருகின்றனர்.

இலங்கை தமிழ் மக்கள் இசை, நடனம், போன்றவற்றில் அதிக ஆர்வம் உள்ளவர்கள் ஆவர். ஏற்கனவே தமிழ் திரையுலகில் சூப்பர்சிங்கர் மூலம் கனடாவைச் சேர்ந்த ஈழத்து பெண்ணான ஜெசிக்கா தமிழர்களிடையே பிரபலமானார். தற்போது கனடாவைச் சேர்ந்த மற்றொரு பெண்ணான லக்ஷ்மி சிவனேஸ்வரலிங்கம் பிரபல இசையமைப்பாளரின் இசையில் பின்னணி பாடகியாக அறிமுகமாகியுள்ளார்.

அவர் வேறு யாருமில்லை, தமிழ் சினிமாவில் புதிய குரல்களை அறிமுகப்படுத்தி வரும் டி.இமான் தான். இவர் ஏற்கனவே தன்னுடைய இசையில் சாட்டை படத்தில் கனடாவில் ஈழத்து பெண்ணான எலிசபெத்துக்கு வாய்ப்பு தந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயம்ரவி, அரவிந்த்சாமி, ஹன்சிகா நடிப்பில் விரைவில் திரைக்கு வரவுள்ள போகன் திரைப்படத்தில் தான் லக்ஷ்மி பின்னணி பாடகியாக அறிமுகமாகவுள்ளார்.

குரல் பதிவிற்காக சென்னை சென்றிருந்த லக்ஷ்மி சிவனேஸ்வரலிங்கம் 24ம் தேதி குரல் பதிவினை முடித்து இன்று டொரான்டோ வந்தடைந்தார். டி.இமான் அவர்களின் இசையில் பாடியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்தார்.

Loading...