சங்கமித்ராவில் ஸ்ருதிக்கு பதிலாக நடிக்கவுள்ளது இவர்தானா?

ஸ்ருதி ஹாசன்

பெரிய பட்ஜெட்டில் தேனாண்டாள் நிறுவனம் தயாரிக்கவுள்ள சங்கமித்ரா படத்தில் முதலில் ஸ்ருதிஹாசன் தான் நடிக்கவிருந்தார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக அவர் நீக்கப்பட்டார்.

இந்த படத்திற்காக ஸ்ருதி லண்டனுக்கு சென்று வாள் பயிற்சி எடுத்துக்கொண்டார். மேலும் கேன்ஸ் திரைப்பட விழாவில் ஸ்ருதிஹாசன், ஆர்யா, ஜெயம் ரவி ஆகியோர் இருக்கும் போஸ்டர்கள் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நடிகை நயன்தாரா தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார். அப்படி நடித்த படங்கள் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளன. இந்நிலையில் நயன்தாராவை தேடி இந்த பிரம்மாண்ட வாய்ப்பு வந்துள்ளது.

இந்த ரோலில் நடிக்க நயன்தாராவை அணுகியுள்ளது படக்குழு, ஆனால் அவர் இன்னும் எந்த பதிலும் சொல்லவில்லையாம். எனவே இந்த பிரமாண்ட படத்தில் நயன்தாரா நடிப்பாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

Loading...