ஜெய், அஞ்சலி திருமணம் எங்கு, எப்போது நடக்கிறது- வெளியான தகவல்

அஞ்சலி - ஜெய்
அஞ்சலி - ஜெய்

சினிமா நடிகர்களுக்குள் காதல் ஏற்பட்டு விட்டால் அதை உடனே அவர்கள் வெளியில் கூற மாட்டார்கள். ஆனால் அது எப்படியோ வெளியே கசிய அவர்களது காதல் விஷயத்தை அப்படியே பெரிதாக்கி விடுவார்கள் ஒருசிலர்.

அந்த வகையில் தற்போது ரசிகர்களால் மிகவும் ஹாட் விஷயமாக பேசப்படுவது ஜெய், அஞ்சலி காதல் பற்றி தான். இவர்கள் காதலை வெளியில் அறிவிக்கவில்லை என்றாலும் இருவரும் செய்யும் டுவிட்டுக்கள் அப்படிதான் கூறுகிறது.

இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் டிசம்பர் மாதம் திருப்பதியில் திருமணம் நடக்க இருப்பதாக அஞ்சலியின் உறவினர்கள் தெரிவித்ததாக தெலுங்கு சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.

Loading...