யாரைப் பார்த்து ஆன்ட்டின்னு நக்கலு?: அனுஷ்கா அதிரடி திட்டம்

அனுஷ்கா
அனுஷ்கா

உடல் எடையை குறைக்க ஒரு குட்டி பிரேக் எடுக்கப் போகிறாராம் நடிகை அனுஷ்கா.

இஞ்சி இடுப்பழகி படத்திற்காக உடல் எடையை அதிகரித்தார் அனுஷ்கா. அதன் பிறகு எடையை குறைத்த போதிலும் அவர் பழைய ஷேப்புக்கு வரவில்லை.

இந்த காரணத்தால் ரசிகர்கள் அவரை குண்டு ஆன்ட்டி என்று கலாய்த்தனர்.

அனுஷ்காவும் யோகா, டயட், ஜிம்மில் மாங்கு மாங்குன்னு ஒர்க்அவுட் எல்லாம் செய்தும் ஒரு பலனும் இல்லை. உடல் எடை அப்படியே இருக்கிறது. இதனால் அவர் ஒரு முடிவுக்கு வந்துள்ளார்.

தீவிரமாக யோகா செய்து உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக முடிவு செய்துள்ளார் அனுஷ்கா. அதனால் ஒரு குட்டி பிரேக் எடுத்துச் சென்று வெயிட்டை குறைக்க உள்ளார்.

அனுஷ்கா
அனுஷ்கா

தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டிருப்பதால் சரியாக யோகா, உடற்பயிற்சி எல்லாம் செய்ய நேரம் இல்லை என்று நினைக்கிறார் அனுஷ்கா. அதனால் தான் குட்டி பிரேக் எடுக்கிறார்.

அனுஷ்கா தற்போது பாக்மதி என்னும் தெலுங்கு படத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. புதிய பட வாய்ப்புகள் எதையும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...