பிரபாஸ் – அனுஷ்கா இணைந்து பல படங்களில் நடித்திருந்தாலும் பாகுபலி படத்திற்கு பிறகு இருவர் குறித்த காதல் கிசு கிசு தொடர்ந்து வெளிவந்தன.

பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸ் நடிக்கும் படம் சாஹோ, இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆகிய மொழிகளில் வெளிவர உள்ளது. இந்த படத்தில் பாலிவுட் நடிகை நடிப்பதாக ஆரம்பத்தில் கூறப்பட்டது.

ஆனால் பாலிவுட் நடிகை நடிக்க மறுத்தால் பிரபாஸ் நடிகை அனுஷ்காவை சாஹோ படத்தில் நடிக்க சிபாரிசு செய்துள்ளார், ஆனால் கிசு கிசுகளுக்கு பயந்த அனுஷ்கா ஆரம்பத்தில் நடிக்க மறுத்துவிட்டார்.

பிரபாஸ் நேரடியாக கேட்டதால் தற்போது அனுஷ்கா பச்சை கொடி காட்டியுள்ளார். இதனைதொடர்ந்து பிரபாஸ் மற்றும் அனுஷ்கா இருவரும் ஐந்தாவது முறையாக சாஹோ படத்தில் ஜோடி சேர உள்ளனர்..

Loading...