இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர் முருகதாஸ். இவர் படத்தில் நடிக்க பல நடிகர், நடிகைகள் வெயிட்டிங். அப்படியிருக்க இவர் தொடர்ந்து மூன்றாவது முறையாக தமிழில் விஜய்யுடன் இணைந்து பணியாற்றவுள்ளார்.

இந்நிலையில் இவர் இதுக்குறித்து தமிழகத்தின் முன்னணி வார இதழ் ஒன்றில் தெரிவிக்கையில் ‘ஒரு ப்ரஸ்மீட் வைத்து சொல்லலாம் என்று இருந்தேன்.

ஆனால், தற்போதே சொல்கிறேன், விஜய் சாருடன் மூன்றாவது முறையாக இணையவுள்ளேன், கத்தி படத்தை போல் இப்படமும் அழுத்தமான மெசெஜ் உள்ள படம்.

அந்த மெசெஜ் என்ன என்பதை இன்னும் விஜய் சாரிடம் கூட நான் சொல்லவில்லை’ என்று முருகதாஸ் கூறியுள்ளார்.

Loading...