அஜித்துடன் ஜோடி சேருகிறாரா நடிகை அமலாபால்

அமலாபால்
அமலாபால்

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடித்து வருபவர் நடிகை அமலாபால். இவரது நடிப்பில் இன்று தமிழில் VIP 2 படம் வெளியாகியுள்ளது.

படத்தை பார்த்த ரசிகர்களும் தங்களது விமர்சனங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் அமலாபாலிடம் பெரிய நடிகர்களுடன் எப்போது நடிக்கப் போகிறீர்கள் என்று கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் விக்ரம், விஜய்யுடன் நடித்து விட்டேன். இதற்கு முன்னரே அஜித்துடன் ஒரு படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது, சில காரணங்களால் அப்படத்தில் நடிக்க முடியவில்லை. விரைவில் அவருடன் புதிய படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என நம்பிக்கை இருப்பதாக கூறியுள்ளார்.

Loading...