கடவுள் சினிமாவின் கடவுள் மாதிரி, அவர் நடிப்புடன் யாரையும் ஒப்பிட முடியாது என்றார் நடிகர் சித்தார்த்.
கன்னடத்தில் லூசியா என்ற பெயரில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படத்தை தமிழில் ‘எனக்குள் ஒருவன்’ என்ற பெயரில் ரீமேக் செய்கிறார்கள்.

1984-ல் கவிதாலயா தயாரிப்பில் வெளியானது கமல் நடித்த எனக்குள் ஒருவன். கவிதாலயாவிடம் உரிய உரிமை வாங்கி இந்தப் படத்திற்கு அந்த பெயரை வைத்திருக்கிறார் சி.வி.குமார்.
நடிகர் சித்தார்த் இந்தப் படத்தில் எடுப்பான பல், அழுக்கான சட்டை, கோமாளித் தனமான நடிப்பு என ஒரு பாத்திரத்தில் தோன்றுகிறார். தன் ரொமான்டிக் இமேஜை (??) உடைக்கவே இந்த கெட்டப் மாற்றமாம்.
சித்தார்த்தின் கடின முயற்சியைப் பாராட்டும் விதத்தில் ‘சித்தார்த் கமலைப் போலவே நடித்திருக்கிறார்’ என்று சொல்லிவிட்டார், இந்தப் படத்தில் நடிக்கும் அஜய் ரத்னம்.
இதற்கு மறுப்பு தெரிவித்த சித்தார்த், ‘கமல் சார் திரையுலகத்தோட கடவுள் மாதிரி. அவர் நடிச்சதுல 10 சதவீதம் கூட நான் நடிக்கல. அஜய் ரத்னம் சார்கிட்ட அப்பறமா ‘இந்த விஷயம் கமல் சாருக்கு தெரியாமல் பார்த்துக்க சொல்லனும்னு நினைச்சேன்.
ஆனா இப்ப சொல்றேன் இந்த விஷயம் கமல் சாருக்கு இல்ல, அவரோட ரசிகர்களுக்கு தெரிஞ்சா கூட போதும் செருப்பால அடிப்பாங்க,” என்றார் ஏக அடக்கத்துடன்.
அதென்னமோ சரிதான்!

Loading...