போங்கு திரைவிமர்சனம்

போங்கு
போங்கு

சினிமாவில் ஒரு நல்ல படம் கொடுக்க வேண்டும் என முயற்சி எடுப்பவர்கள் பலர். இப்போதிருக்கும் போட்டியில் புதிதாக படம் எடுத்து அது வெளிவந்தாலே வெற்றி தான் என்ற சூழ்நிலை இருக்கிறது. போங்கு என்னும் பெயரில் வெளிவந்திருக்கும் இப்படம் என்ன போக்கை காட்டுகிறது என பார்ப்போம்.

கதைக்களம்

நட்டி நடராஜ் தன் நண்பர்களான அர்ஜுனன், ஹீரோயின் ருஹி ஆகிய மூவரும் ஒரே கார் கம்பெனியில் வேலை செய்யும் நண்பர்கள்.

சந்தோசமாக சென்றுகொண்டிருக்க, ஒரு நாள் புயல் வீசுகிறது. ஒரு பிரபல அரசியல்வாதிக்காக இவர்கள் விற்பனை செய்த கார், டெலிவரி கொடுக்கும் போது கத்தி முனையை காட்டி காரை திருடுகிறது ஒரு மர்ம கும்பல்.

இந்நிலையில் நட்டி, அர்ஜுனன் இருவரும் செய்யாத தவறுக்காக சிறை தண்டனை அனுபவிக்கிறார்கள். பின் வெளியே வந்த இவர்கள் சிறை நண்பர் ஒருவரின் உதவியால் வேறு வழியில்லாமல் கடத்தில் கும்பலிடம் வேலைக்கு சேர்கிறார்கள்.

நட்டி குழுவினர் பணத்திற்காக கடத்தல் வேலையை செய்கிறார்கள். தன் பாஸ் சொல்லும் வேலையை கச்சிதமாக முடிக்கும் நட்டிக்கு மிகப் பெரிய டார்கெட் வருகிறது. இந்த டார்கெட்டில் தான் பிரபல ரவுடியின் பின் புலன் உள்ளது.

போங்கு
போங்கு

மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி பாண்டி அரசியல்வாதியின் மகளை கொல்ல திட்டம் தீட்டுகிறார். இவர் ஏன் அவரை கொல்ல வேண்டும்?.

நட்டியின் விற்பனை செய்த காரை கடத்தியது யார், இவர்கள் சிறை சென்றதன் பின்னணியில் இருப்பது யார். காணாமல் போன காரை ஹீரோ கண்டுபித்தாரா?, டார்கெட்டை செய்து முடித்தாரா? என்பதே மீதி கதை.

படம் பற்றிய அலசல்

ஒளிப்பதிவாளராக இருந்த நட்டி நட்ராஜ் தான் இப்படத்தின் ஹீரோ. படம் முழுக்க இவருக்கே முக்கியதுவம் இருப்பது போல தெரிகிறது. இவரின் நடிப்பு சரியாக பொருந்துகிறது.

ருஹி சிங் நட்டி கூடவே படம் முழுக்க பயணித்தாலும் ஹீரோயின் என்பது போல தெரியவில்லை. நட்டியின் நண்பர் போலவே தெரிகிறார். முதல் பாதி கொஞ்சம் பின் தள்ளுவது போல ஒரு ஃபீல். ஆனால் இரண்டாம் பாதி கண்களை முழுவதும் திறந்த பார்க்க வைக்கிறது.

காமெடி நடிகர் மயில் சாமிக்கு ஒரே ஒரு காட்சி தான். இவர் நட்டி கும்பலிடம் சிக்கி கொள்ளும் காமெடி காட்சி ஒகே. மற்றொரு காமெடி நடிகரான ராம் தாஸ் வரும் காட்சிகள் லைட் ஸ்மைல்.

அதே போல காமெடி நடிகர் சாம்ஸ் வந்து போகும் காட்சிகள் ரொம்பவே சிரிப்பை தூண்டுகிறது. ஒரு காரை பாதுகாக்க இவர் செய்யும் செயல் வேடிக்கை தான்.

துப்பறியும் போலிஸ் அதிகாரியாக நடித்திருக்கும் அதுல் குல்கர்னி தன் வேடத்தை சரியாக நகர்த்தியுள்ளார். ஒரு கட்டத்தில் நட்டியே போலிஸ் செய்யவேண்டியதை செய்து முடிப்பது ஒன் மேன் ஷோ போல இருந்தாலும் கொஞ்சம் இடிக்கிறது.

ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் படத்தில் இரண்டு ஐட்டம் பாடல்கள், ஒரு ட்ராவல் ஜோர்னி பாடல் வைத்திருக்கிறார்கள்.

கிளாப்ஸ்

நட்டியின் நடிப்பு இரண்டாம் பாதியில் தனியாக தெரிகிறது. டான்ஸ் கூட நன்றாக ஆடுகிறார். இவருக்கு வில்லனாக நடிக்க வாய்ப்புகள் நிறைய தேடிவரலாம்.

காமெடி நடிகர்களில் சாம்ஸ் ஸ்கோர் அள்ளுகிறார். பெரிய டார்கெட்டை நூதனமாக நடித்து கூட்டணி செய்து முடிப்பது ரொம்ப சிம்பிளாக முடிந்துவிட்டது.

போலிஸ் ஆஃபிசர் அதுல் கிளைமாக்ஸில் ஹீரோவுக்கு மெசேஜ் சொல்லும் விதம் குட். இயக்குனர் தாஜ் நினைத்தால் இன்னும் நல்ல கதை கொடுக்க முடியும்.

பல்ப்ஸ்

நட்டியின் பேச்சு படம் முழுக்க ரஜினி ஸ்டைல் போல இருக்கிறது. தன் சாயலில் அவர் பேயிருந்தால் நடிப்பிற்கு இன்னும் நன்கு பொருந்தும் என தோன்றுகிறது.

சண்டைகாட்சிகளில் வாள், கத்தி, அரிவாள் சத்தம் பல் கூச்சம். சிலவற்றை தவிர்த்திருக்கலாம்.

பாடல்கள் பெரிதளவில் இல்லை. முதல் ஐட்டம் பாடலை தவிர்த்திருக்கலாம்.

மொத்தத்தில் போங்கு ஓகே. ஒரு தனி பாங்கு.

Loading...