ஜாலி பாய் ஆர்யாவுக்கு ஷாக் கொடுத்த நயன்தாரா

பில்லா, ஆரம்பம் போன்ற படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் தற்போது யட்சன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் ஆர்யா, கிருஷ்ணா, தீபா சந்ந்தி, ஸ்வாதி ரெட்டி, கிஷோர், தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர் என பலர் நடிக்கின்றனர். அதோடு இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுவாக தான் நடிக்காத படங்களின் படப்பிடிப்பு தளத்திற்கு செல்லாத நயன்தாரா, யட்சன் படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு திடீர் விசிட் அடித்து அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளார்.

சில நிமிடங்கள் படக்குழுவினர்களுடன் பேசிவிட்டு அவர் சென்றுவிட்டதாகவும் அதன் பின்னர் படப்பிடிப்பு தொடர்ந்ததாகவும் கூறப்படுகிறது.

Loading...