இளையதளபதி விஜய்க்கு பல சினிமா நடிகைகள் ரசிகைகளாக இருக்கிறார்கள். பலரும் அவருடன் நடிக்க ஆசை இருப்பதாகவும் பேட்டிகளிலும், நேர்காணல்களிலும் சொல்லியிருக்கிறார்கள்.

அவரது பிறந்த நாளான ஜுன் 22 க்கு இன்னும் இரு தினங்களே உள்ளது. மேலும் ரசிகர்கள் நேற்று ஒரு புதுமையான ஒரு போஸ்டரை இதற்காக உருவாக்கி CZAR VIJAY BDAY COMMON DP என ட்ரண்ட் செய்து வருகிறார்கள்.

இதில் தங்க நிறத்தில் விஜய் போட்டோவை டிசைன் செய்து தங்க தளபதி என சிவப்பு, மஞ்சள் காம்பினேஷனில் உருவாக்கியிருக்கிறார்கள். தற்போது நடிகை ஸ்ரீ திவ்யா இது போன்ற ஒரு போஸ்டர் வேலைப்பாட்டை இதுவரை பார்த்தில்லை.

விஜய் ரசிகர்களிடம் இருந்து அழகாக வெளிப்பட்டுள்ளது என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். டாப் ஹீரோக்களை சினிபிரபலங்களுக்கு பிடிக்காமல் போய்விடுமா என்ன?

Loading...