விஜய் சார் சொன்னது இப்போது உண்மையாக நடந்திருக்கிறது- ஏ.எல். விஜய்

ஏ.எல். விஜய்
ஏ.எல். விஜய்

கடந்த நான்கு நாட்களாக சினிமா துறையில் பெறும் சோகம் நிலவி வந்தது. தமிழக அரசுக்கும், சினிமா துறைக்கும் நடந்த இந்த போராட்டத்தில் நேற்று சுமூக முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இன்று முதல் திரையரங்குகளும் திறக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வனமகன் மற்றும் இவன் தந்திரன் படக்குழுவினர் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஏற்பாடு செய்தனர். அதில் வனமகன் இயக்குனர் ஏ.எல். விஜய் பேசும்போது, விஜய் சார் தலைவா பட ரிலீஸ் அப்போது ஒன்று சொன்னது நியாபகம் வருகிறது.

ஒரு படம் ஜெயிக்கிறதும், தோல்வியடைறதும் மக்கள் கையில் இருக்க வேண்டும், சூழ்நிலைக்காக இருக்க கூடாது என்று கூறினார். அந்த நிலைமை தான் இப்போது, சூழ்நிலையால் படங்கள் பாதிப்பை அடைந்திருக்கிறது என்று கூறியுள்ளார்.

Loading...