தமிழகத்தில் திரையரங்குகளில் கேளிக்கை வரியை ரத்து செய்ய வலியுறுத்தி 4 நாட்களாக தொடர்ந்து திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதனால் புதிய படங்கள் வெளியாகி திரையரங்குகளில் முடங்கியுள்ளன.

கேளிக்கை வரிவிதிப்பிற்கு எதிராக  தமிழ் முன்னணி நடிகர்களான விஜய், அஜித் இதுவரையில் குரல் கொடுக்காதது வருத்தமளிப்பதாக நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.

சென்னையில் பிரபல படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ஜெயம் ரவி கலந்து கொண்டு பேசுகையில் தமிழ் திரையுலகில் பிரச்னைகள் ஏற்படும் போது குரல் கொடுக்க யாரும் முன்வராது கிடையாது எனத் தெரிவித்தார்.

Loading...