நான் ‘அந்த’ மாதிரி பெண் அல்ல: பதறும் நடிகை அனுயா!

அனுயா
அனுயா

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார் நடிகை அனுயா.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளவர்களில் முதல் ஆளாக வெளியேற்றப்பட்டவர் நடிகை அனுயா. பிக் பாஸ் வீட்டிற்கு வந்ததில் இருந்து அவர் எதுவும் பேசவில்லை, சர்ச்சையிலும் சிக்கவில்லை.

இந்நிலையில் நிகழ்ச்சி பற்றி அவர் கூறியிருப்பதாவது,

அனுயா
அனுயா

நான் நிஜ வாழ்க்கையில் என்ன மாதிரியான ஆள் என்பதை மக்களுக்கு தெரிவிக்கவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். எஸ்எம்எஸ் படத்தில் திருமணத்திற்கு முன்பு உறவு வைத்துக்கொள்ளும் பெண்ணாக நடித்ததாலோ அல்லது மதுரை சம்பவத்தில் கெட்டவளாக நடித்ததாலோ நான் அது மாதிரியான பெண் அல்ல.

அனுயா
அனுயா

நான் ஒரு நடிகை. சினிமா துறைக்கு வரும் முன்பு முறையாக நடிப்பு பயிற்சி பெற்றுள்ளேன். எனக்கு கொடுத்த கதாபாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளேன். ஆனால் திரையில் பார்த்து என்னை பற்றி மக்கள் ஒரு முடிவுக்கு வந்துவிட்டனர். நிஜத்தில் நான் எப்படிப்பட்டவள் என்பதை புரிய வைக்கவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றேன்.

அனுயா
அனுயா

ரசிகர்களுக்கு திரையுலக பிரபலங்களை பார்க்கப் பிடிக்கும். பிரபலங்கள் நடிக்காமல் அவர்களாக இருப்பதை டிவியில் பார்க்க மக்களிடம் ஆர்வம் அதிகம் உள்ளது.

பிரபலங்கள் 24 மணிநேரமும் கேமரா மூலம் கண்காணிக்கப்படுவது மக்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது. இந்த நிகழ்ச்சி நிச்சயம் ஹிட்டாகும். ஆனால் இதன் மூலம் தவறான செய்தி பரப்பப்படுகிறது என்று நான் நினைக்கிறேன்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து சீக்கிரம் வெளியேற்றப்படுவேன் என எனக்கு தெரியும். அதனால் தான் நான் அழவில்லை. பிக் பாஸ் வீட்டில் தமிழில் பேச வேண்டும். எனக்கு தமிழ் சரியாக வராது. மொழி பிரச்சனையாகிவிட்டது என்றார் அனுயா.

Loading...