விவேகம் படத்தின் இசை மற்றும் ட்ரைலர் ரிலீஸ் தேதி!

விவேகம்
விவேகம்

சிவா இயக்கத்தில் நடிகர் அஜீத் நடித்து வரும் படம் ‘விவேகம்’. இந்தப் படத்தில் காஜல் அகர்வால், அக்ஷ்ரா ஹாசன், விவேக் ஓபராய் மற்றும் பலர் நடித்துள்ளார். படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பல்கேரியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்று முடிந்துள்ளது. இப்படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டு பல புதிய சாதனைகளைப் படைத்தது.

இதற்கிடையே சர்வைவா,தலை விடுதலை பாடல்கள் வெளியாகி அஜித் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.ஆகஸ்ட் 10 படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது ஜுலை 27ம் தேதி இப்படத்தின் ட்ரைலர் வெளியீடு நடக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.ட்ரைலர் கட் செய்யும் வேலையில் தற்போது எடிட்டர் ரூபன் மும்மரமாக இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் அதே நாளில் படத்தில் மற்ற பாடல்களும் வெளியாகும் என்று நம்ம தகுந்த வட்டரங்கள் தெரிவிக்கிறது.

Loading...