தனுஷ் வசம் பல படங்கள் தற்போது உள்ளன. விஐபி2 விரைவில் வெளியாகிறது, வடசென்னை படம் துவங்கி அது பாதியில் நிற்கிறது, ஹாலிவுட் படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.

தனுஷ் தர லோக்கல் ரௌடியாக நடித்து சூப்பர்ஹிட் ஆன படம் மாரி. இந்த படத்தின் இரண்டாம் பாகம் வரும் என இதற்குமுன் பலமுறை தனுஷ் மற்றும் இயக்குனர் பாலாஜி மோகன் தெரிவித்திருந்தனர்.

தனுஷ் ரசிகர்களும் அதற்காக ஆவலுடன் காத்திருந்தனர். இந்நிலையில் நேற்று இயக்குனர் மாரி2 பற்றிய அறிவிப்பை வெளியிட்டார். படத்தின் வேலைகளை பூஜையுடன் துவங்குவதாக அதில் தெரிவித்துள்ளார்.

Loading...