மேடையில் அழுத காயத்ரி..!

விஜய் சேதுபதி, காயத்ரி நடிப்பில் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘மெல்லிசை’.

இப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா இன்று காலை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் ராம், கார்த்திக் சுப்புராஜ், நடிகர் மா.கா.பா. ஆனந்த், இயக்குநர் தாமிரா, கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

IMG_0165

இந்த விழாவில் படத்தின் ஹீரோயின் காயத்ரி பேசும்போது திடீரென்று உணர்ச்சவசப்பட்டு அழுதுவிட்டவர் அதற்கு மேல் பேச முடியாமல் அமர்ந்ததைப் பார்த்து சற்று நேரம் அரங்கத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

காயத்ரி பேசும்போது, இந்த ‘மெல்லிசை’ படம் எனக்கு பெரிய திருப்பு முனையாக இருக்கும், நான் அதிகமாக எதிர்பார்க்கும் படம் ‘மெல்லிசை’. இப்படம் நிச்சயம் எனக்குப் பெரிய பெயர் வாங்கித் தரும்” என்று திரும்பத் திரும்ப பேசியவர் சட்டென்று மனம் உடைந்து அழுதுவிட்டார். நடிகர் விஜய் சேதுபதியும், இயக்குநர் ரஞ்சித்தும் அவரைச் சமாதானப்படுத்தினார்கள்.

நடிகர் விஜய் சேதுபதி பேசும்போது, “இந்த கதையை மொத்தமே முக்கால் மணி நேரம்தான் கேட்டேன். உடனேயே இந்த படத்தில் நடிச்சாகணும் என்ற எண்ணம் வந்துவிட்டது. அப்படி ஒரு சிறந்த கதை அது மட்டும் இல்லாமல், இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி என்னை மிகவும் அழகாக வழி நடத்தினார்,

காயத்ரி ஏன் அழுதார் என்றால் அவரின் ஒட்டு மொத்த உழைப்பை இந்த படத்தில் போட்டிருக்கிறார். இந்தப் படம் வெளிவந்தால் தமிழ் சினிமாவில் மிக பெரிய இடத்துக்கு நிச்சயமாக அவர் செல்வார் என்பதில் துளி கூடசந்தேகமி்லலை.

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தில் நடிக்கும்போதே இயக்குனர் பாலாஜிகிட்ட ‘கொஞ்சம் விட்டால், நடிப்புல இந்த பொண்ணு என்னையே தூக்கி சாப்பிட்டிரும்..’ என்று சொன்னேன்.” என்றார்.

IMG_0152

காயத்ரி ’18 வயசு’ என்ற படத்தின் மூலம் தமிழ்ச் சினிமாவில் அறிமுகமானவர். பின்பு விஜய்சேதுபதியுடன் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ என்கிற சூப்பர் ஹிட் படத்தின் மூலம் பிரபலமானவர்.

தொடர்ந்து ‘மத்தாப்பூ’, ‘ரம்மி’ உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்திருக்கிறார். சுத்தமா்ன தமிழ் பெண் என்பதால் அதிகம் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த ஒரு படத்தையே பெரிதாக எண்ணி காத்திருக்கிறார்.

இப்படத்தில் நடிக்கும்போது ஒவ்வொரு காட்சியிலும் கஷ்டப்பட்டு நடித்திருக்கிறாராம் காயத்ரி. இந்தப் படம் தனது கேரியரில் உயர்வைத் தருமென்று இப்போது பெரிதும் நம்பிக் கொண்டிருக்கிறார்.

இந்தச் சூழலில் இந்தப் படத்தின் வெளியீடு தள்ளிப் போனதால் கடும் வருத்தத்தில் இருந்ததாலேயே மேடையில் அழுதுவிட்டார் என்று சொல்லப்படுகிறது.

Loading...