தளபதி விஜய் நடிப்பில் மெர்சல் தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை அட்லீ இயக்க, காஜல், சமந்தா, நித்யா மேனன், வடிவேலு, சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா என பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் ஃபெப்சி தொழிலாளர்களுக்குமிடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ஃபெப்சி தொழிலாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக மெர்சல், காலா படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது, ஏனெனில், இந்த படக்குழுவில் வேலைப்பார்த்த அனைவரும் ஃபெப்சி தொழிலாளர்கள் தான்.

ஆனால், ஃபெப்சி தொழிலாளர்கள் இல்லாமலேயே விஷாலின் துப்பறிவாளன் படப்பிடிப்பு நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Loading...