திரையுலகில் ரீல் ஜோடிகள் ரியல் லைஃபிலும் இணைவது சாதரணம் தான். அந்த வகையில் பலரும் பிரபாஸ், அனுஷ்கா இருவரும் காதலிக்கின்றனர் என பல வதந்தி உலா வந்தது

விரைவில் இவர்கள் திருமணம் செய்துக்கொள்ள இருப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில் முதன் முறையாக ஒரு ஆங்கில நாளிதழ் ஒன்றில் பிரபாஸ் இதுக்குறித்து பேசியுள்ளார்.

இதில் ‘நான் தற்போதைக்கு திருமணம் செய்துக்கொள்ளும் எண்ணத்தில் இல்லை, இந்த செய்தி என்னுடைய பெண் ரசிகைகளுக்கு சந்தோஷத்தை கொடுத்திருக்கலாம்.

மேலும், என்னையும் ஒரு நடிகையையும்(அனுஷ்கா) இணைத்து ஒரு செய்தி வருகின்றது, அதில் உண்மை இல்லை, நான் யாரையும் காதலிக்கவில்லை’ என கூறியுள்ளார்.

Loading...