விஜய்யின் மெர்சல் படம் ரசிகர்களின் அதிக எதிர்ப்பார்ப்பில் இருக்கிறது. இதற்கு நடுவில் ரசிகர்களை குஷிப்படுத்த படக்குழு மிகவும் பிரம்மாண்டமான மேடையில் மெர்சல் பட ஆடியோ வெளியீட்டு விழாவை வரும் 20ம் தேதி நடத்த இருக்கின்றனர்.

இந்த நிலையில் விஜய்யின் பைரவா படம் கேரளாவில் பல விநியோகஸ்தர்களுக்கு நஷ்டத்தை கொடுத்துள்ளது. தற்போது கேரள விநியோகஸ்தர்கள் சங்கம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் பைரவா படத்தால் சில விநியோகஸ்தர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு ஒரு முடிவு கிடைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

தற்போது இந்த பிரச்சனை முடியும் வரை மெர்சல் பட வியாபாரம் கேரளாவில் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.

Loading...