உதயநிதியின் புகார் கடிதம் கிடைக்கட்டும் அவர் மீது நான் புகார் கொடுப்பேன்: காஜல் அகர்வால்

உதயநிதி ஸ்டாலின் என் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் அளித்துள்ள புகார் கடிதம் கிடைத்த உடன் அவர் மீது நான் நடிகர் சங்கத்தில் புகார் தெரிவிப்பேன் என்றார் நடிகை காஜல் அகர்வால்.

உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா நடித்து வரும் நண்பேன்டா படத்தில் ஹீரோயினாக நடிக்க முதலில் காஜல் அகர்வால் தான் ஒப்பந்தம் ஆனார். அவர் படத்தில் நடிக்க ரூ.1 கோடியே 40 லட்சம் கேட்டார். இதையடுத்து அவருக்கு முன்பணமாக ரூ.40 லட்சம் அளிக்கப்பட்டது.

அதன் பிறகு காஜலுக்கு தமிழில் மவுசு இல்லாததால் நயன்தாராவை ஒப்பந்தம் செய்தனர்.

உதயநிதி தான் தயாரித்து நடித்து வரும் நண்பேன்டா படத்தில் நடிக்க கொடுத்த ரூ.40 லட்சம் முன்பணத்தை திருப்பிக் கேட்க காஜலோ அடுத்த படத்தில் நடித்து கழிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

காஜலுக்கு தமிழில் மார்க்கெட் டல்லடித்துள்ளதால் அவரை வைத்து படம் தயாரிக்க விரும்பாத உதயநிதி பணத்தை உடனே கொடுக்குமாறு கூறியுள்ளார்.

காஜலோ பணத்தை திருப்பிக் கொடுக்க மறுத்துவிட்டார். இதையடுத்து உதயநிதி காஜல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் அளித்துள்ள புகார் கடிதம் எனக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. அந்த புகார் கடிதம் என் கையில் கிடைத்தவுடன் உதயநிதி மீது நடிகர் சங்கத்தில் புகார் கொடுக்கப் போகிறேன் என்றார் காஜல்.

 

Loading...