உலகின் செக்சியான பெண் ஸ்பெயின் நாட்டு நடிகை குரூஸ்: அமெரிக்க பத்திரிகை தேர்வு

ஸ்பானிய நடிகை பெனேலோப் குருஸ், வாழும் செக்சியஸ்ட் பெண்ணாக பிரபல வார இதழால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் எஸ்கொயர் இதழ் இந்த பட்டத்தை குரூசுக்கு வழங்கியுள்ளது.

இந்த பத்திரிகை நடத்திய ஆய்வில் இதற்கு முன்பு நடிகைகள் ஏஞ்சலினா ஜூலி, கார்லைஸ் தெரோன் மற்றும் ஹல்லே பெர்ரி ஆகியோர் செக்சியான பெண்கள் பட்டத்தை வென்றுள்ளனர்.

கடந்தாண்டு ஸ்கேரியட் ஜான்சன் இந்த பட்டத்தை வென்றார். வாழும் செக்சியான பெண் என்ற பட்டத்தை பெறும் 40 வயதான பெனேலோப் குருசுக்கு 9 ஸ்டார்கள் கிடைத்துள்ளன.

இவர் நடித்து முடித்துள்ள்ள ‘மா-மா’ என்ற திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. பட்டம் குறித்து பெனேலோப் குருஸ் கூறுகையில், நான் இப்போது நடிப்பு, மாடலிங்கைவிட குடும்பத்தை பார்த்துக்கொள்வதில்தான் அதிக அக்கறை காண்பித்து வருகிறேன் என்றார்.

Loading...