சிறுத்தை சிவா இயக்கத்தில் அடுத்து அஜீத் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை அதீத முயற்சி செய்து கிட்டத்தட்ட பெற்றுவிட்டாராம் ஹன்சிகா.

கோலிவுட்டுக்கு புதிதாக நடிக்க வரும் நடிகைகள் தங்களுக்கு அஜீத், விஜய்யுடன் ஜோடி சேர வேண்டும் என்று ஆரம்பத்திலேயே ஒரு பிட்டை போட்டுவிடுகிறார்கள். பின்னர் அவர்களின் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெறவும் சிலர் முயற்சி செய்கிறார்கள். ஏற்கனவே அஜீத், விஜய்யுடன் ஜோடி சேர முன்னணி நடிகைகள் முயற்சி செய்வதால் புதுமுகங்களுக்கு வாய்ப்பு கிடைப்பது மிகவும் அரிது.

இந்நிலையில் கோலிவுட்டின் முன்னணி நாயகியான ஹன்சிகாவுக்கும் அஜீத்துடன் நடிக்கும் ஆசை வந்துள்ளது. இதையடுத்து அவர் அஜீத்தை அடுத்ததாக இயக்கும் சிறுத்தை சிவாவை அணுகி வாய்ப்பு கேட்டாராம். அந்த படத்தில் நடிக்க சமந்தா உள்ளிட்ட முன்னணி நடிகைகள் அடிபோட்ட நிலையில் ஹன்சிகாவும் முயற்சியில் இறங்கினார்.

ஹன்சிகாவின் முயற்சியால் சிவா இயக்கும் படத்தில் அஜீத் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கே கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாம். ஹன்சிகா ஏற்கனவே விஜய்யுடன் வேலாயுதம் படத்தில் நடித்துள்ளார். மேலும் சிம்புதேவன் இயக்கும் படத்திலும் விஜய்யுடன் நடிக்கிறார் ஹன்சிகா.

Loading...