தளபதி 63 பட்ஜெட் என்ன தெரியுமா?

தளபதி 63 படத்தின் பட்ஜெட் குறித்த தகவல் இணையத்தில் கசியத் தொடங்கியுள்ளது. தளபதி ரசிகர்களும் இந்த தகவலை வேகமாக ஷேர் செய்து வருகின்றனர்.

Dec 24, 2018 - 12:36
 0
தளபதி 63 பட்ஜெட் என்ன தெரியுமா?
தளபதி 63

தளபதி 63 படத்தின் பட்ஜெட் குறித்த தகவல் இணையத்தில் கசியத் தொடங்கியுள்ளது. தளபதி ரசிகர்களும் இந்த தகவலை வேகமாக ஷேர் செய்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தளபதி விஜய் முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை அடுத்து அட்லீ இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

AGS எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்க இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார்.

மேலும் நயன்தாரா நாயகியாக நடிக்க யோகி பாபு, விவேக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர்.

ஜனவரி மாதத்தில் படப்பிடிப்புகள் தொடங்கி தீபாவளிக்கு ரிலீசாக உள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது இப்படத்தின் பட்ஜெட் குறித்த தகவலும் இணையத்தில் கசிய தளபதி ரசிகர்கள் இதனை ஷேர் செய்து வருகின்றனர்.

அதாவது இது ஸ்போர்ட்ஸ் சம்மந்தப்பட்ட படம் என்பதால் பட்ஜெட் எப்படியும் 100 கோடியை தாண்டும் என கூறப்படுகிறது. உண்மையான பட்ஜெட் என்ன என்பதை படக்குழு அறிவிக்கும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

like

dislike

love

funny

angry

sad

wow

Pirapalam Tamil Cinema Editor