அகந்தை பேச்சு - வடிவேலுவுக்கு கண்டனம் தெரிவித்த சமுத்திரக்கனி!

வடிவேலு இயக்குநர்கள் ஷங்கர், சிம்புதேவனை தரக்குறைவாக பேசியது தவறு என்று சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார்.

அகந்தை பேச்சு - வடிவேலுவுக்கு கண்டனம் தெரிவித்த சமுத்திரக்கனி!
வடிவேலு

வடிவேலு இயக்குநர்கள் ஷங்கர், சிம்புதேவனை தரக்குறைவாக பேசியது தவறு என்று சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார்.

ப்ரெண்ட்ஸ் படத்தில் வந்த நேசமணி கதாபாத்திரம் சமூக வலைதளங்களில் உலக அளவில் டிரெண்டானது. இதையடுத்து தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த வடிவேலு இயக்குநர்கள் ஷங்கர் மற்றும் சிம்புதேவனை கடுமையாக விமர்சித்து பேசினார். 

இயக்குநர் அவதாரம் எடுத்ததில் இருந்து இன்று வரை வெற்றிகரமான இயக்குநராக வலம் வரும் ஷங்கரை கிராபிக்ஸ் இயக்குநர் என்று நக்கல் செய்தார் வடிவேலு. 

வடிவேலு ஷங்கரை கிண்டல் செய்தது திரையுலகினருக்கு பிடிக்கவில்லை. வடிவேலு நல்ல கலைஞன் தான் ஆனால் இந்த அளவுக்கு அகந்தை இருக்கக் கூடாது. திறமை இருக்கிறது என்பதற்காக சாதனையாளரான ஷங்கரை விளாசக் கூடாது. இவர் இவ்வளவு அகம்பாவத்துடன் இருந்தால் யார் நடிக்க அழைப்பார்களாம் என்று கோடம்பாக்கத்தில் பேசிக் கொள்கிறார்கள். 

வடிவேலுவின் பேட்டியை பார்த்த இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனி ட்விட்டரில் கூறியிருப்பதாவது, 'அண்ணன் வடிவேலு அவர்களின் பேட்டி பார்த்தேன். இயக்குநர்கள் ஷங்கர், சிம்புதேவன் இருவரையும் நாகரீகமற்ற வார்த்தையால் பேசியிருப்பது பெரும் வருத்தத்திற்கும் கண்டணத்திற்கும் உரியது. சிம்புவின் கிரியேட்டிவ் புலிகேசி தவிர்த்து மற்ற படைப்புகளிலும் தெரியும். இயக்குநர்களை அவமதிக்காதீர்கள்!' என்று தெரிவித்துள்ளார். 

வடிவேலு பேசிய விதம் அவரின் ரசிகர்கள் சிலருக்கே பிடிக்கவில்லை. என்ன தான் பெரிய திறமையாளராக இருந்தாலும் அகந்தை கூடாது. அப்படி அகந்தை வந்துவிட்டால் யாரும் சீண்ட மாட்டார்கள். வடிவேலு சார், நீங்க இப்படி எல்லாம் பேசாதீங்க. பார்க்கவே கஷ்டமாக உள்ளது என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

வடிவேலுவின் பேட்டியை பார்த்துவிட்டு இயக்குநரும், நடிகருமான நவீனும் தனது கண்டனத்தை தெரிவித்தார். 24ம் புலிகேசி படம் பிரச்சனையில் உள்ளத கடுப்பில் வடிவேலு ஷங்கர், சிம்புதேவனை விளாசிவிட்டார். ஏதோ ஆதங்கத்தில் மனதில் பட்டத்தையெல்லாம் யோசிக்காமல் கொட்டிவிட்டார். அதை பெரிதுபடுத்தி அவரை ஒதுக்க வேண்டாம் என்று அவரின் தீவிர ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். வடிவேலு பேசினால் மட்டும் ஆளாளுக்கு கேள்வி கேட்கிறீர்கள், கண்டனம் தெரிவிக்கிறீர்களே ஆனால் 'அவர்' பேசிக் கொண்டே இருக்கிறாரே ஏன் ஒருவர் கூட வாய் திறப்பது இல்லை என்று சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.