அகம்பாவத்திற்காக நமீதா இழந்தது என்ன?

அகம்பாவம் படத்திற்காக இயக்குனர் சொல்லாமலேயே ஒரு காரியம் செய்துள்ளார் நமீதா.

அகம்பாவத்திற்காக நமீதா இழந்தது என்ன?
நமீதா
அகம்பாவத்திற்காக நமீதா இழந்தது என்ன?

அகம்பாவம் படத்திற்காக இயக்குனர் சொல்லாமலேயே ஒரு காரியம் செய்துள்ளார் நமீதா.

திருமணத்திற்கு பிறகு நமீதாவை தேடி ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள பட வாய்ப்பு வந்தது. அது தான் அகம்பாவம். சரத்குமாரை வைத்து சத்ரபதி படத்தை இயக்கிய மகேஷ் தான் அகம்பாவம் படத்தின் இயக்குனர்.

படம் மற்றும் நமீதா குறித்து மகேஷ் கூறியதாவது,

திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதில் விருப்பம் இல்லாமல் இருந்த நமீதாவிடம் அகம்பாவம் கதையை சொன்னேன். கதையை கேட்ட உடனேயே நான் இந்த படத்தில் நடிக்கிறேன் என்று கூறினார். அதோடு மட்டும் அல்லாமல் நான் எதுவும் சொல்லாமலேயே தனது எடையை 10 கிலோ குறைத்துவிட்டார்.

ஒரு பெண் போராளிக்கும், சாதியை வைத்து அரசியல் செய்யும் வில்லனுக்கும் இடையே நடக்கும் போர் தான் அகம்பாவம். இந்த படத்தில் ஒரு அழகிய காதல் டிராக்கும் உள்ளது. வில்லனாக தயாரிப்பாளர் வாராகி நடித்துள்ளார். இமைக்கா நொடிகள் படத்தை பார்த்துவிட்டு மக்கள் அனுராக் கஷ்யப் பற்றி பேசியது போன்று இந்த படம் வாராகிக்கு அமையும்.

கிளைமேக்ஸ் காட்சி நீதிமன்றத்தில் நடக்கும். நமீதாவின் நடிப்பை நம்பியே 20 நிமிட கிளைமாக்ஸ் வைத்தோம். அவர் பேசும் வசனங்கள் அனல் பறக்கும். இப்படி ஒரு படத்தில் நடிக்கவே காத்திருந்தேன் என்று நமீதா கூறினார். நமீதாவிடம் நாம் இதுவரை பார்த்திராத புதுமையான நடிப்பை இந்த படத்தில் பார்ப்போம்.

நடை, உடை, ஹேர் ஸ்டைல் என்று நமீதா வித்தியாசமாக இருப்பார். ஆக்ஷன் காட்சிகளிலும் அசத்தியுள்ளார். சத்ரபதி படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தும் பெரிய இடைவெளியாகிவிட்டது. இந்த படம் ரிலீஸான பிறகு நான் தொடர்ந்து பிசியாகிவிடுவேன் என்று நம்பிக்கை உள்ளது. இது நமீதாவுக்கும், எனக்கும் ரீ-என்ட்ரி என்கிறார் மகேஷ்.