அக்ஷாரா ஹாசனின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியிட்டது அவரின் முன்னாள் காதலரா?

நடிகர் கமல்ஹாசனின் இரண்டு மகள்களும் அவரவர் ஒரு துறையை தேர்வு செய்து அவர்களின் வழிகளில் வேலை செய்து வருகின்றனர்.

அக்ஷாரா ஹாசனின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியிட்டது அவரின் முன்னாள் காதலரா?
அக்ஷரா ஹாசன்

நடிகர் கமல்ஹாசனின் இரண்டு மகள்களும் அவரவர் ஒரு துறையை தேர்வு செய்து அவர்களின் வழிகளில் வேலை செய்து வருகின்றனர்.

ஆரம்பத்தில் நிறைய படங்களில் நடித்து வந்த ஸ்ருதிஹாசன் இப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். அக்ஷரா ஹாசன் ஒரே ஒரு படம் தான் தமிழில் நடித்தார், அதன்பிறகு அவர் எந்த படமும் நடிக்கவில்லை.

படங்கள் நடிக்கவில்லை என்றாலும் பரபரப்பாக அவர் சில புகைப்படங்களால் சமீபத்தில் பேசப்பட்டார். அவரது அந்தரங்க புகைப்படங்களை யாரோ சமூக வலைதளங்களில் ஷேர் செய்துள்ளனர். இதனால் கோபமான அவர் புகைப்படங்களை வெளியிட்டவர்கள் மீது சரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அவரின் புகாரின் பேரில் போலீசார் அக்ஷரா ஹாசனின் முன்னாள் காதலன் தனுஜ் விர்வாணியை சந்தேகத்தில் விசாரணை செய்துள்ளனர். ஆனால் அவரோ இதை நான் செய்யவில்லை என்று கூறியுள்ளார்.