அஜித்தின் விஸ்வாசம் எப்படிபட்ட கதை- இயக்குனர் சிவா எக்ஸ்ளூசிவ் தகவல்!

பல வருடங்களாக சினிமா ரசிகர்கள் காத்திருந்த அந்த தருணம் வந்துவிட்டது, ரஜினியின் 2.0 ரிலீஸ் ஆகிவிட்டது. இந்த கொண்டாட்டத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு விஸ்வாசம் பட இயக்குனர் மற்றொரு மகிழ்ச்சியை கொடுத்துள்ளார்.

அஜித்தின் விஸ்வாசம் எப்படிபட்ட கதை- இயக்குனர் சிவா எக்ஸ்ளூசிவ் தகவல்!
அஜித்

பல வருடங்களாக சினிமா ரசிகர்கள் காத்திருந்த அந்த தருணம் வந்துவிட்டது, ரஜினியின் 2.0 ரிலீஸ் ஆகிவிட்டது. இந்த கொண்டாட்டத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு விஸ்வாசம் பட இயக்குனர் மற்றொரு மகிழ்ச்சியை கொடுத்துள்ளார்.

அதாவது ஒரு பேட்டியில் முதன்முறையாக படத்தின் கதை குறித்தும், பிரபலங்கள் பற்றியும் பேசியுள்ளார். சரி அதில் இயக்குனர் சிவா என்னென்ன விஷயங்கள் கூறியுள்ளார் என்ற விவரம் இதோ, ஜாலியான எமோஷ்னலான திருவிழா படமாக இருக்க வேண்டும் என்று தான் அஜித் சார், நான், தயாரிப்பாளர் முடிவு செய்தோம்.

தேனி மாவட்டத்தில் கொடுவிலார் மாவட்டத்தில் நடக்கும் கதை தான் இது. வெளியே வீரமாகவும், உள்ளுக்குள் வெள்ளந்தியாகவும் வாழுகிற மனசுங்களோட உணர்வு பூர்வமான சம்பவங்கள் தான் இந்த விஸ்வாசம் கதை. ஒரு கிராமத்து ஆள் எப்படி இருப்பார்களோ அப்படியே நடித்து அஜித் அசத்தியுள்ளார்.

மதுரை பாஷையில் அஜித் அசத்தலாக பேசியுள்ளார். இதில் அஜித்திற்கு இரண்டு வேடம் எல்லாம் இல்லை, முதல் பாதியில் கிராமத்திலும் இரண்டாம் பாதி நகரத்திலும் கலக்குகிறார். நயன்தாராவிற்கு வெயிட்டான வேடம், நிரஞ்ஜனா என்ற பெயரில் நடித்துள்ளார்.

படத்தில் 5 பாடல்கள் உள்ளது, ஒவ்வொன்றும் ஒரு ஸ்டைல், முக்கியமாக 2 பவர்புல்லான பாடல்கள் உள்ளது என்றார் இயக்குனர்.