அஜித் பட இயக்குனருடன் நடிக்க உள்ளாரா ரஜினிகாந்த்?

அஜித் பட இயக்குனருடன் நடிக்க உள்ளாரா ரஜினிகாந்த்?
ரஜினிகாந்த்

சிறுத்தை சிவாவுடன் விஸ்வாசம் படத்தில் நடித்து முடித்துள்ளார் அஜித். இந்த படத்திற்கு அடுத்ததாக தீரன் பட இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் இந்த படத்திற்கு அடுத்ததாக எச்.வினோத் ரஜினியை இயக்கவுள்ளார் என்ற தகவல் வேகமாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

மேலும் இந்த படத்தில் ரஜினியின் மருமகன் தனுஷும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

பேட்ட படத்திற்கு அடுத்ததாக ரஜினி ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.