அஜித், விஜய்க்கும் மேல பெருசா ஆசைப்படும் நயன்தாரா: நடக்குமா?

நயன்தாராவின் நீண்ட கால ஆசை பற்றி தெரிந்தால் அசந்துவிடுவீர்கள்.

அஜித், விஜய்க்கும் மேல பெருசா ஆசைப்படும் நயன்தாரா: நடக்குமா?
நயன்தாரா

நயன்தாராவின் நீண்ட கால ஆசை பற்றி தெரிந்தால் அசந்துவிடுவீர்கள்.

கோலிவுட்டின் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. அவர் எவ்வளவு சம்பளம் கேட்டாலும் கொடுக்க தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் தயாராக உள்ளனர். 

தற்போது கோலிவுட்டில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையும் நயன்தாரா தான். 

ஹீரோக்களுக்கு இணையான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா. கதாபாத்திரம் மட்டும் அல்ல சம்பளமும் ஹீரோக்களுக்கு இணையாக இல்லை இல்லை அவர்களை விட அதிகம் வாங்க வேண்டும் என்பதே அவரின் ஆசையாம். 

நயன்தாரா தற்போது படம் ஒன்றுக்கு ரூ. 5 கோடி வாங்குவதாக கூறப்படுகிறது. இதுவே படம் ஒன்றுக்கு ரூ. 50 கோடி சம்பளம் வாங்க வேண்டும் என்பதே அவரின் நீண்ட கால ஆசையாம். அவர் ஆசைப்படுவதில் தப்பு இல்லை. ஆனால் அது நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

நயன்தாரா தற்போது தளபதி 63 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். 10 ஆண்டுகள் கழித்து அவர் விஜய்யுடன் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளார். இந்த படத்திற்காக அவர் மொத்தமாக கால்ஷீட் கொடுத்துள்ளார். கண்டிப்பாக அவருக்கு வெயிட்டான கதாபாத்திரமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. 

தளபதி 63 ஷூட்டிங்ஸ்பாட்டில் நயன்தாரா தனது காரில் ஏறிச் சென்றபோது எடுத்த வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. முன்னதாக விஜய்யின் வீடியோக்கள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.