ஆடை படத்தில் நடிப்பது அமலா பாலுக்கு ரொம்ப ஈஸி: ஏன் தெரியுமா?

ஆடை படத்தில் நடிப்பது அமலா பாலுக்கு மிகவும் எளிது.

ஆடை படத்தில் நடிப்பது அமலா பாலுக்கு ரொம்ப ஈஸி: ஏன் தெரியுமா?
அமலா பால்

ஆடை படத்தில் நடிப்பது அமலா பாலுக்கு மிகவும் எளிது.

ரத்னகுமார் இயக்கத்தில் அமலா பால் நடித்து வரும் படம் ஆடை. அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அமலா பால் ஆடையில்லாமல் டிஷு பேப்பரை சுற்றிக் கொண்டு போஸ் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

படத்தை பார்க்கும்போது அந்த காட்சி ஏன் அப்படி வைக்கப்பட்டுள்ளது என்பது புரியுமாம்.

அமலா பால்

டிசம்பர் 31ம் தேதி இரவு புத்தாண்டை வரவேற்க அனைவரும் தயாரான போது ஆடை படக்குழு மட்டும் தீயாக வேலை செய்துள்ளது. அமலா பாலுக்கு மட்டும் வீட்டிற்கு போக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கிளம்பிச் செல்லும் முன்பு அவர் படக்குழுவுடன் சேர்ந்து கேக் வெட்டிவிட்டு சென்றுள்ளார்.

ஆடை படத்தில் ஜாலியான நகரத்து பெண்ணாக நடிக்கிறாராம் அமலா. தன்னை அறியும் முயற்சியில் ஈடுபடுகிறாராம். நிஜ வாழ்க்கையிலும் தன்னை அறிதல் வேலையில் தான் அமலா ஈடுபட்டுள்ளார். நிஜ வாழ்க்கையில் செய்வதை படத்திலும் செய்வதில் அவருக்கு சிரமம் இருக்காது. அவர் அவராக நடித்தால் போதும். அதனால் ஆடை படத்தில் நடிப்பது அமலாவுக்கு எளிது என்கிறார் இயக்குனர். 

எந்த குறையும் சொல்லாமல், முகத்தை தூக்கி வைத்துக் கொள்ளாமல் நடித்துக் கொடுக்கிறாராம் அமலா. பெரு முயற்சி செய்து மலையாள வாடை இல்லாமல் தமிழ் பேசி நடிக்கிறார் அமலா என்று இயக்குனர் ரத்னகுமார் தெரிவித்துள்ளார். 

ஆடை என்று பெயர் வைத்துவிட்டு ஹீரோயினுக்கு ஆடை கொடுக்க மறந்துவிட்டாரே இயக்குனர் என்ற பேச்சு கிளம்பியது. அவர் ஏன் ஆடை கொடுக்கவில்லை என்பது தெரிந்த பிறகு யாரும் இப்படி விமர்சிக்க மாட்டார்களாம்.