ஆரவ் படத்தில் ஓவியா என்ன தான் செய்கிறார்?

ஆரவின் ராஜபீமா படத்தில் ஓவியாவின் கதாபாத்திரம் என்ன என்பது தெரிய வந்துள்ளது.

ஆரவ் படத்தில் ஓவியா என்ன தான் செய்கிறார்?
ஓவியா

ஆரவின் ராஜபீமா படத்தில் ஓவியாவின் கதாபாத்திரம் என்ன என்பது தெரிய வந்துள்ளது.

நரேஷ் சம்பத் இயக்கத்தில் பிக் பாஸ் புகழ் ஆரவ், ஆஷிமா நடித்து வரும் படம் ராஜபீமா. இந்த படத்தில் ஓவியா ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடுகிறார் என்பது அனைவருக்கும் தெரியும். 

இந்நிலையில் படத்தில் ஓவியாவுக்கு டான்ஸை தாண்டியும் வேலை உள்ளதாக ஆரவ் தெரிவித்திருந்தார். 

ராஜ பீமா படத்தில் ஓவியா டான்ஸ் மட்டும் ஆடவில்லை, ஒரு சஸ்பென்ஸ் உள்ளது என்றார் ஆரவ். அந்த சஸ்பென்ஸ் என்னவென்பது தெரிய வந்துள்ளது. ஓவியா குத்தாட்டம் போட்டதுடன் சில காட்சிகளிலும் வருகிறாராம். அந்த குத்தாட்ட பாடலை பொள்ளாச்சியில் படமாக்கியுள்ளனர். 

படத்தில் ஆரவ் ஓவியாவின் தீவிர ரசிகராக நடிக்கிறராம். படத்தில் ஓவியா அவராகவே வருகிறாராம். அதாவது நடிகை ஓவியாவாகவே நடிக்கிறாராம். அவர் ஒரு தியேட்டருக்கு வர ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொள்கிறார்களாம். அப்படித் தான் ரசிகனான ஆரவ், ஓவியாவுடன் குத்தாட்டம் போடும் பாடல் வருமாம். 

ஓவியா, ஆரவ் ஆடும் பாடலில் பிக் பாஸ் வீட்டில் இருந்த போது ஓவியா பேசி பிரபலமான வசனங்கள் வருகிறதாம். ஷட்டப் பண்ணுங்க, ஸ்ப்ரே அடிச்சிடுவேன், கொக்கு நெட்ட கொக்கு ஆகிய வார்த்தைகள் அந்த பாடலில் வருமாம். ஓவியா ஆரவுடன் சேர்ந்து வரும் சில காட்சிகளை இந்த மாதம் படமாக்க உள்ளனர். 

ஓவியா குத்தாட்டம் போட்டதற்கு பதிலாக ஆரவ் ஜோடியாக நடித்திருந்தால் அவர்களின் ரசிகர்கள் மேலும் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள். இருக்கட்டும் அதுவும் விரைவில் நடக்கும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.