இதுக்கு உடையை அணியாமலே வந்திருக்கலாமே என கூறிய நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த சோனாக்‌ஷி சின்கா!

பாலிவுட்டின் டாப் ஹீரோயின்களில் சோனாக்‌ஷி சின்காவும் ஒருவர். தமிழிலும் ரஜினியின் லிங்கா படத்தில் நடித்து இங்குள்ளவர்களுக்கு தெரிந்த முகமானார்.

இதுக்கு உடையை அணியாமலே வந்திருக்கலாமே என கூறிய நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த சோனாக்‌ஷி சின்கா!
சோனாக்‌ஷி சின்கா

பாலிவுட்டின் டாப் ஹீரோயின்களில் சோனாக்‌ஷி சின்காவும் ஒருவர். தமிழிலும் ரஜினியின் லிங்கா படத்தில் நடித்து இங்குள்ளவர்களுக்கு தெரிந்த முகமானார்.

சினிமாவிற்கு வருவதற்கு முன்னர் உடல் பருத்து இருந்தவர் அதன்பின் தீவிர உடற்பயிற்சியால் ஸ்லீம் ஆனார். இருந்தாலும் தற்போதும் சோனாக்‌ஷி சின்காவை நெட்டிசன்கள் கலாய்க்க மறப்பதில்லை

கடந்த வருடம் அவர் வெளியிட்ட தனது ஹாட்டான புகைப்படத்தை தற்போது வரை பலரும் கிண்டலடித்து வருவதால் அதற்கு சமீபத்திய டிவி நிகழ்ச்சி ஒன்றில் சோனக்‌ஷி பதிலளித்துள்ளார். அவர் கூறுகையில், என் புகைப்படத்தை பார்த்துவிட்டு இந்திய கலாச்சாரத்தை பற்றி பேசுகிறார்களே அதே ஆட்கள் தான் இன்ஸ்டாகிராமில் வெளிநாட்டு நடிகைகளின் பிகினி புகைப்படங்களுக்கு லைக் போடுகிறார்கள்.

என் உடையை பார்த்து கிண்டல் செய்கிறார்களே, நான் என்ன என் உடல் தெரியும்படியாகவா இருக்கிறேன். உடல் பாகங்கள் தெரியும்படி நானே உடை அணிய மாட்டேன். எனக்கு எது சவுகரியமோ அந்த உடையை தான் அணிவேன் என்று சோனாக்ஷி சின்ஹா தெரிவித்துள்ளார்.

சோனாக்‌ஷி சின்கா