இது தான் பேட்ட படத்தின் கதையா?

ரஜினியின் பேட்ட படத்தின் கதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இது தான் பேட்ட படத்தின் கதையா?
பேட்ட

ரஜினியின் பேட்ட படத்தின் கதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சசிகுமார், சிம்ரன், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள பேட்ட படம் வரும் 10ம் தேதி ரிலீஸாக உள்ளது. பேட்ட பொங்கல் கொண்டாட்டம் ஏற்கனவே அமர்க்களமாக துவங்கிவிட்டது.

பேட்ட படத்தில் சசிகுமாரின் பெயர் மாலிக் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் ஒரு இந்து பெண்ணை காதலிப்பாராம். இது குறித்து பெண் வீட்டாருக்கு தெரிய வரவே அவர்கள் கூலிப் படையை ஏவி சசிகுமாரை கொன்றுவிடுவார்களாம். 

தமிழகத்தில் ஆணவக் கொலைகள் அதிகரித்து வரும் நிலையில் அதையே தனது கதையின் மையக்கருவாக எடுத்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ். நண்பன் சசிகுமாரை கொலை செய்த கும்பலை கண்டுபிடித்து பழி தீர்க்கிறாராம் ரஜினி. இது தான் பேட்ட படத்தின் கதை என்று கூறப்படுகிறது. இதை கார்த்திக் சுப்புராஜ் தான் உறுதி செய்ய வேண்டும். 

பேட்ட படத்தில் நவாசுத்தீன் சித்திக்கி இந்துவாக நடித்துள்ளார். அவரும், அவருடைய கும்பலும் தான் சசிகுமாரை கொல்லும் என்று கருதப்படுகிறது. கொல காண்டுல இருக்கே மவனே கொல்லாம விட மாட்டேன் என்று ரஜினி கூறியதற்கு தற்போது அர்த்தம் புரிகிறது. படம் நிச்சயம் சுவாரஸ்யமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. 

பேட்ட ட்ரெய்லரை பார்த்த பிறகு படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. பாட்ஷா அளவுக்கு பேட்ட இருக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர் ரசிகர்கள். மெசேஜ் மட்டுமே சொல்லாமல் இப்படி ஸ்டைலாகவும் நடிங்க தலைவரே என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.